×

மருத்துவமனை திறக்க மறியலில் ஈடுபட்டதால் கைது முயற்சி : கால்நடைகளுடன் போலீஸ் வேனில் ஏற முயன்ற பொதுமக்கள்

வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் விசுவநாதன் நகரில் கால்நடை மருத்துவமனை இயங்கி வந்தது. இதனால் அப்பகுதியில் கால்நடை வைத்திருந்தவர்கள், நோய் பாதிப்பின்போது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தனர். இதற்கிடையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனை, சின்னுநகருக்கு மாற்றப்பட்டது. இதனால் விசுவநாதன் நகரில் உள்ள மக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்நடைகளுடன் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே இருந்த இடத்திலேயே மருத்துவமனை திறக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அரியூர் விசுவநாதன் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திடீரென நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏடிஎஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அவர்கள் கால்நடைகளுடன் போலீஸ் வேனில் ஏற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் கால்நடை மருத்துவ அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Livestock, police van, civilians
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்